கல்லொழுவை தக்கியா வீதி முஸ்லிம்கள் முன்னெடுத்த சிரமதானப் பணி - sonakar.com

Post Top Ad

Tuesday 26 February 2019

கல்லொழுவை தக்கியா வீதி முஸ்லிம்கள் முன்னெடுத்த சிரமதானப் பணி


கல்லொழுவை பிரதேச சுற்றுச்சூழலைத் துப்புறவு செய்யும் நோக்கில், குப்பைகளற்ற சிறந்த கிராமமாக உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைவான மா பெரும் சிரமதானப் பணியொன்று, மினுவாங்கொடை - கல்லொழுவை, தக்கியா வீதியில், கடந்த (24) ஞாயிற்றுக்கிழமையன்று முன்னெடுக்கப்பட்டது.


தக்கியா வீதியின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான பாதையைத் துப்பறவு செய்யும் இச்சிரமதானப் பணியில்,  தக்கியா வீதியின் இரு மருங்கிலுமுள்ள கால்வாய்கள், புற்பூண்டுகள் மற்றும் குப்பைக்கூளங்கள் என்பன காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரையிலான இரண்டு மணி நேரத்திற்குள் முற்று முழுதாகத் துப்புறவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


மினுவாங்கொடை பொது சுகாதாரப்பரிசோதகர்களான எஸ்.ஏ. அஜித் புஷ்பகுமார (பத்தண்டுவன பிரிவு), கே.பீ.எம்.பீ. வீரசேன (நெதகமுவ பிரிவு) ஆகியோரது மேற்பார்வையின் கீழ் இடம்பெற்ற இச்சிரமதானப் பணிகளில், கல்லொழுவை பிரதேச வாழ் பெரும்பாலான நலன்விரும்பிகள், சிறார்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment