ஜாவத்தை பள்ளிவாசலில் சுதந்திர தினத்தையொட்டி விசேட நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Monday 4 February 2019

ஜாவத்தை பள்ளிவாசலில் சுதந்திர தினத்தையொட்டி விசேட நிகழ்வு


இலங்கையின் 71வது தேசிய தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பட்டில் இஸ்லாமிய சமய நிகழ்வு கொழும்பு-07இல் உள்ள ஜாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் அதன் உப தலைவர் ஹமீட் ஷாலி தலைமையில் விசேட நிகழ்வொன்று இன்று இடம் பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக பிரதி அமைச்சர் அமீர் அலி, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.பௌசி, மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஷாலி, டி.ஐ.ஜி. கொமாண்டர் லத்தீப், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக், ஈரான் இ;லாமியக் குடியரசின் இலங்கை;கான தூதுவர் செய்ரி அமிரானி, சவுதி தூதரகத்தின் தூதுவர், அமைச்சின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள், உலமாக்கள் எனப் பலர் கலந்ணுது சிறப்பித்தனர்.

இதன்போது தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிவாசல் வளாகத்தில் தேசிய தின ஞாபகார்த்தமாக மரக் கன்றுகள் நாட்டல் உள்ளிட்ட முக்கிய வைபவங்களும் இடம் பெற்றன. இதன்போது ஜனாஸா குளிப்பாட்டும் புதிய கட்டிடத்திற்கான வரைபடம், புதிய ஹவுள் கட்டுவதற்கான வரைபடம், பெண்கள் தொழுவதற்கான தொழுகை அறை மற்றும் நூலகம் என்பன திறந்து வைக்கப்பட்டதுடன் மத்ரஸாவில் குர்ஆனை சிறப்பாக ஓதியவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பள்ளிவாசலின் பிரதம இமாமுக்கு கார் ஒன்றும் அன்பளிப்பாக வழங்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment