பெயர் தான் இரண்டு; கொள்கை ஒன்றே: மஹிந்த U-Turn! - sonakar.com

Post Top Ad

Sunday, 6 January 2019

பெயர் தான் இரண்டு; கொள்கை ஒன்றே: மஹிந்த U-Turn!ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் பெயரில் தான் வித்தியாசமுண்டே தவிர கொள்கையில் இரண்டும் ஒன்றே என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக பினாமி தலைவரின் கீழ் மஹிந்த ராஜபக்ச இயக்கி வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தானும் சேர்ந்து கொண்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த போதிலும் தற்போது நாடாளுமன்ற உறுப்புரிமைக்குச் சிக்கல் வந்துவிடும் என்பதால் அதனை மறுதலித்து வருகிறார்.

இந்நிலையில் ஒக்டோபர் இறுதியில் மைத்ரியுடன் ஏற்பட்ட சமரசத்தின் பின்னணியில் இரு கட்சியும் ஒன்றேயென அவர் தெரிவிக்கிறார். எனினும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன 'சிங்கள தேசிய' கொள்கை அடிப்படையைக் கொண்டதெனவும் சிங்கள மக்களிடம் மஹிந்த தரப்பு பிரச்சாரம் செய்து வருகிறது.

அதேவேளை, அதே கட்சிக்கு முஸ்லிம் பெரமுன அமைத்து அது முஸ்லிம்களுக்குமான கட்சியெனவும் தமிழ் பெரமுன அமைத்து அது தமிழர்களுக்கான கட்சியெனவும் மஹிந்த தரப்பு பிரச்சாரங்களை செய்து வருகின்றமையும் இனவாத அடிப்படையிலேயே மஹிந்த தரப்பின் அரசியல் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment