இராணுவத்திலிருந்து தப்பியோடிய 'நாமல் குமார'! - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 January 2019

இராணுவத்திலிருந்து தப்பியோடிய 'நாமல் குமார'!


பொலிஸ் உளவாளி நாமல் குமார இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் என நீதிமன்றில் தெரிவித்துள்ளது குற்றப் புலனாய்வுப் பிரிவு.ஜனாதிபதி மைத்ரி கொலை விவகார உளவு மூலம் பிரபலமடைந்துள்ள நாமல், 2010ல் இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளதுடன் போலி சான்றிதழ்களைக் காண்பித்து விமானப்படை மற்றும் இராணுவத்தில் இணைந்துள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹிந்த அணியில் இணைந்து அரசியலில் இறங்கப் போவதாகவும் நாமல் குமார தெரிவித்து வருவதுடன் அமித், டான் உட்பட்ட கடும்போக்குவாதிகளால் தற்சமயம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றமையும் முன்னர் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment