அமைச்சர்கள் ஒத்துழைத்தால் போதும்: இம்ரான் - sonakar.com

Post Top Ad

Sunday 6 January 2019

அமைச்சர்கள் ஒத்துழைத்தால் போதும்: இம்ரான்


அமைச்சுப்பதவியல்ல அமைச்சர்களின் ஒத்துழைப்பே எனது எதிர்பார்ப்பு என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலையில் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற  கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்களுக்கு சேவை செய்யவே எங்களை மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் கடந்த மூன்று வருடமாக காணப்பட்ட தேசிய அரசின் மூலம் எங்களை போன்ற பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களால் எமது மக்களுக்கு நாம் நினைத்ததை போல் சேவை செய்ய முடியவில்லை.

தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின் ஆதரவாளர்களிடம் பாரிய எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் எம்மால் அடுத்த தேர்தலுக்கு அவர்கள் முன் செல்ல முடியாது.

இவ்வாறு கூறியதும் நீங்களும் அமைச்சுப்பதவியை எதிர்பார்கிறீர்களா என ஊடகங்கள் என்னிடம் வினவுகின்றனர். 19 வது திருத்த சட்டத்தின்படி அமைச்சர் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே நானும் அமைச்சு பதவி கேட்டு தலைமையை சிரமத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை.

ஆனால் முன்னைய காலத்தை போல் அல்லாமல் இப்போது அமைச்சர்களின் பூரண ஒத்துழைப்பையே நான் பிரதமரிடமும் அமைச்சர்களிடமும் கோரியுள்ளேன். இவர்களின் பூரண ஒத்துழைப்பு எனக்கு கிடைப்பின் பிரதி அமைச்சர்களை விட சிறப்பாக என்னால் செயல்பட முடியும் என்றார்.

-சப்ரி

No comments:

Post a Comment