மஹிந்த தேசப்பிரிய பதவியை இராஜினாமா செய்வதை விட எப்படியாவது தேர்தலை நடாத்துவதற்கு முயற்சிக்கலாம் என தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.
நவம்பருக்குள் மாகாண சபை தேர்தலை நடாத்தாவிட்டால் தான் இராஜினாமா செய்யப் போவதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு தற்போது வழிமுறையில்லையெனவும் எந்த முறைமையில் அதனை நடாத்துவது என நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் எனவும் சுஜீவ சேனசிங்க பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு நவம்பர் வெளியிடப்படும் என புதிய எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இச்சூழ்நிலையில் தேசப்பிரிய விலகுவதை விட தேர்தலை நடாத்துவதற்கு முயற்சிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ச அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment