
சட்ட-ஒழுங்கு மற்றும் ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்புகளை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கும் எந்த எண்ணமும் இல்லையென தெரிவிக்கிறார் அகில விராஜ காரியவசம்.
அது மேலும் அரசியல் சிக்கல்களை உருவாக்கும் எனவும் 19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக பாதுகாப்பு மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்களே ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் செயற்பட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
சட்ட-ஒழுங்கு ஐக்கிய தேசியக் கட்சி வசம் இருந்த போதிலும் முன்னைய அரசின் ஊழல் வழக்குகள் நிறைவுபெறவோ இனவாத நடவடிக்கைகள் உடனடியாக கட்டுப்படுத்தப்படவோ இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment