மௌலவி ஸதக்கத்துல்லாஹ்வின் மறைவு நல்லிணக்கத்துக்குப் பேரிடி: MCSL - sonakar.com

Post Top Ad

Friday 28 December 2018

மௌலவி ஸதக்கத்துல்லாஹ்வின் மறைவு நல்லிணக்கத்துக்குப் பேரிடி: MCSL



நாட்டில் இனங்களுக்கிடையே ஐக்கியம், சகவாழ்வு, நல்லிணக்கம் ஏற்படப் பாடுபட்ட மௌலவி ஏ.சீ.எம். ஸதக்கத்துல்லாஹ்வின் மறைவு இத்துறையில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

திகன இனக் கலவரத்தின் போது காடையர்களால் தாக்கப்பட்டு, எட்டு மாதங்களாக குற்றுயிராகவிருந்த மௌலவி ஸதக்கத்துல்லாஹ்வின் மறைவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,



மௌலவி ஸதக்கத்துல்லாஹ் ஆழ்ந்த சிங்கள அறிவுடையவர். சிங்களத்தில் ஜும்ஆப் பிரசங்கங்கள் மற்றும் விரிவுரைகளை நடத்துவதில் சிறப்புத் தகைமை மிகுந்த அவர் கல்வி அதிகாரியாக பணிபுரிந்து கல்வி வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

இன நல்லிணக்கத்துக்கு பாடுபடும் பெருந்தகைகள் பெருமளவில் தேவைப்படும் ஒரு கால கட்டத்திலே மௌலவி ஸதக்கத்துல்லாஹ்வின் பிரிவு இடம்பெற்றுள்ளது. அன்னாரின் பாவங்களை மன்னிப்பதற்காக அனைவரும் பிரார்த்திப்போம் என்று முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment