இனி மத்திய கிழக்கு செல்லவும் 'அனைத்து நாடுகளுக்குமான' கடவுச் சீட்டே! - sonakar.com

Post Top Ad

Thursday 27 December 2018

இனி மத்திய கிழக்கு செல்லவும் 'அனைத்து நாடுகளுக்குமான' கடவுச் சீட்டே!


மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரமான பிரத்யேக கடவுச்சீட்டு வழங்கலை இம்மாத இறுதியுடன் நிறுத்திக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது குடிவரவு குடியகல்வு திணைக்களம்.


இதன் பின்னணியில் புதிதாக வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கள் அனைத்து நாடுகளுக்குமானதாகவே அமையும் எனவும் மத்திய கிழக்குக்கு வேலைவாய்ப்புக்காக செல்வோரும் அதே கடவுச்சீட்டையே பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகள் பற்றாக்குறையினால் கடவுச்சீட்டு வழங்கலில் தாமதம் நிலவி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment