மஹிந்த 'கட்சி' மாறியதற்கான ஆதாரங்கள் ஒப்படைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 December 2018

மஹிந்த 'கட்சி' மாறியதற்கான ஆதாரங்கள் ஒப்படைப்பு


கடந்த நவம்பர் மாதம் 11ம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன உறுப்பினராக மஹிந்த ராஜபக்ச இணைந்து கொண்டதற்கான ஆதாரங்கள், சபாநாயகரின் வேண்டுகோளுக்கிணங்க ஒப்படைக்கப்பட்டுள்ளது.


குறித்த தினம் மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச தாம் குறித்த கட்சியில் இணைந்து உறுப்புரிமை பெற்றுக்கொண்டுள்ளதாக தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் ஊடாக தகவல் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அங்கமும் இல்லாத குறித்த கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பது எப்படியென கேள்வியெழுப்பப்பட்டுள்ளதோடு வெள்ளியன்று மீண்டும் சபை கூடும் போது இது தொடர்பில் சபாநாயகரின் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. இப்பின்னணியிலேயே ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் சுசில் பிரேமஜயந்த தான் சேரவில்லையென மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment