ஆளுனர்களை விலகக் கோரும் மைத்ரி; ரோஹித மறுப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 31 December 2018

ஆளுனர்களை விலகக் கோரும் மைத்ரி; ரோஹித மறுப்பு!


விடுமுறையிலிருந்து நாடு திரும்பிய கையோடு மாகாண ஆளுனர்கள் பலரை பதவி விலகுமாறு ஜனாதிபதி 'கோரிக்கை' விடுத்துள்ளார்.மீண்டும் அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும் எனும் நம்பிக்கையில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உட்பட சிலர் தமது இராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக (இதுவரை) தகவல் அறியமுடிகிறது.

எனினும், கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம இது பற்றி தனக்குத் தெரியாது எனவும் தனக்கு அவ்வாறான அறிவுறுத்தல் எதுவும் வரவில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment