இனி வேண்டாம் ஒதுங்கி விடுங்கள்: மைத்ரிக்கு குடும்பத்தினர் அறிவுரை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 26 December 2018

இனி வேண்டாம் ஒதுங்கி விடுங்கள்: மைத்ரிக்கு குடும்பத்தினர் அறிவுரை!


ஒக்டோபர் 26 அரசியல் பிரளயம் மூலம் நிறைவேற்று அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முனைந்து பாரிய சிக்கல்களை சந்தித்த நிலையில் குடும்பததினருடன் விடுமுறையில் சென்றுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

இந்நிலையில், ஐந்து வருட பதவிக்காலத்தை பூர்த்தி செய்துவிட்டு கண்ணியமாக ஒதுங்கிக் கொள்வதே சிறந்தது என குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.50 வருட அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ள மைத்ரிபால சிறிசேன, நல்லாட்சியை உருவாக்கி நாட்டை முன்னேற்றப் போவதாக தெரிவித்திருந்த போதிலும் ஐ.தே.க - சு.க கூட்டணியை முறித்துக் கொண்டதுடன் இரு தரப்பு உறவும் முறிந்துள்ளது. எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சி வேறு ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் என்ற நிலையிலேயே இச்சம்பவங்கள் அரங்கேறியிருந்த அதேவேளை மஹிந்த தரப்பிலும் மாற்றீடுள்ளதால் மைத்ரிபால சிறிசேன கண்ணியமாக ஒதுங்கிக் கொள்வது நல்லதென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எஞ்சியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி தொடர்பான நல்லபிப்பிராயத்தை உருவாக்கும் வகையிலான செயற்திட்டங்களை மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment