
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன - கோத்தபாய ராஜபக்ச கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னணியில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையைத் தவிர்த்து வந்த பூஜித இன்று தனது வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
பொலிஸ் உளவாளி நாமல் குமாரவை முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவுக்கு அறிமுகப்படுத்தியது பூஜிதவே என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பூஜிதவிடம் சி.ஐ.டியினர் வாக்குமூலம் பெற முயற்சி செய்து வந்திருந்தனர். இதனை பூஜித தவிர்த்து வந்த நிலையில் ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையிலேயே பூஜித இன்று விசாரணைக்கு சமூகமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment