சஜித்திடம் தலைமைப் பதவியை ஒப்படையுங்கள்: ரணிலுக்கு கடிதம்! - sonakar.com

Post Top Ad

Monday, 19 November 2018

சஜித்திடம் தலைமைப் பதவியை ஒப்படையுங்கள்: ரணிலுக்கு கடிதம்!


சஜித் பிரேமதாசவிடம் கட்சியின் தலைமைப் பதவியை ஒப்படைக்குமாறு கோடி மாத்தளை நகரபிதா தல்ஜித் அலுவிஹார ரணில் விக்கிரமசிங்கவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் கட்சியின் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுத்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லுமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் சஜித்திடம் தலைமைப் பதவியை ஒப்படைப்பது தற்போதைய  சூழ்நிலையில் சிறந்த முடிவாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ரணிலின் தலைமையில் கீழ், ஐக்கிய தேசியக் கட்சி அடி மட்ட பௌத்த மக்களின் ஆதரவை முற்றாக இழந்துள்ளதாகவும் அது மீளக் கட்டியெழுப்பப் பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment