ஜனாதிபதி தேர்தல் நடக்காது: GLக்கு சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 October 2018

ஜனாதிபதி தேர்தல் நடக்காது: GLக்கு சந்தேகம்!சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்துள்ளதாக மக்களை ஏமாற்றி வரும் அரசாங்கம், ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது சந்தேகம் என தெரிவிக்கிறார் ஜி.எல். பீரிஸ்.


தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்குவதாக இருந்தால், தேர்தல்கள் அரசாங்கத்தால் இழுத்தடிக்கப்படுவதை எதிர்த்து இந்நேரம் நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும் என தெரிவிக்கும் ஜி.எல்., 20ம் திருத்தச் சட்டம் மூலம் ஜனாதிபதி தேர்தலை நடாத்தாது, நாடாளுமன்றம் மூலம் ஜனாதிபதியைத் தெரிவு செய்யவே முயற்சி நடப்பதாக தெரிவிக்கிறார்.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முதுகெலும்பில்லாதவர் எனவும் ஜி.எல். விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment