இடைக்கால அரசு வேண்டாம்: பசில் தலைமையில் முடிவு! - sonakar.com

Post Top Ad

Monday, 8 October 2018

இடைக்கால அரசு வேண்டாம்: பசில் தலைமையில் முடிவு!


ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் இறுதி முயற்சியாக இடைக்கால அரசமைக்கும் திட்டத்தை கூட்டு எதிர்க்கட்சி முன்னெடுத்து வரும் நிலையில் தனியாட்சி மூலமே ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என பசில் ராஜபக்ச தலைமையில் இன்று கூடிய பெரமுன உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.எனினும், இடைக்கால அரசு திட்டம் பற்றியும் பிறிதொரு கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் பின் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மைத்ரி அணியை கூட்டணி அரசிலிருந்து பிரிப்பதன் மூலம் இடைக்கால அரசை உருவாக்க கூட்டு எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment