ஜமால் கஷோகி விவகாரம்: ட்ரம்ப் - சல்மான் தொலைபேசி உரையாடல் - sonakar.com

Post Top Ad

Tuesday 16 October 2018

ஜமால் கஷோகி விவகாரம்: ட்ரம்ப் - சல்மான் தொலைபேசி உரையாடல்


துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குள் சென்ற ஊடகவியலாளர் ஜமால் கஷோகி காணாமல் போயுள்ள நிலையில் சவுதி அரேபியா அவரைக் கொலை செய்து விட்டதாக பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சவுதி அரேபியா இதனை நிராகரித்துள்ள அதேவேளை, துருக்கியுடன் விசாரணை விடயங்களில் ஒத்துழைத்து வருவதாக தெரிவிக்கிறது. எனினும், இரு நாடுகளுக்குமிடையில் முறுகல் நிலை நிலவுவதாக இரு நாட்டு ஊடகங்களும் தகவல் வெளியிட்டு வருகின்றன.



இந்நிலையில், சவுதியின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளை அமெரிக்க ஊடகங்களில் விமர்சித்து வந்த ஜமால் கஷோகி விவகாரத்தில் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருவதுடன் நேற்றைய தினம் சவுதி மன்னர் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக சவுதி அரேபியா தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபர் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் சவுதி அதனை மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருவதோடு ட்ரம்ப் சவுதிக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பார் எனவும் நம்பிக்கை நிலவுகின்றமையும் இன்றைய தினம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மன்னர் சல்மானை சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment