நீண்ட காலம் 'காத்திருக்கும்' இந்திய கொலையாளி: விமல் தகவல்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 October 2018

நீண்ட காலம் 'காத்திருக்கும்' இந்திய கொலையாளி: விமல் தகவல்!


மைத்ரிபால சிறிசேன, மஹிந்த மற்றும் கோத்தாபேயை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் குறித்த விவகாரத்தில் கைதான இந்திய பிரஜை இந்திய உளவுத்துறையான ரோவின் உறுப்பினர் எனவும் அவரது அடையாள அட்டை இலக்கம் RB317217/VJ எனவும் தகவல் வெளியிட்டுள்ளார் விமல் வீரவன்ச.


2015 தேர்தலுக்கு முன்பாகவே ராஜேந்திரன் எனும் குறித்த நபர் இலங்கை வந்து விட்டதாகவும் தனது இலக்குக்காக நீண்ட நாள் காத்திருப்பதாகவும் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் ஆகக்குறைந்தது இரு தடவைகள் விமல் வீரவன்சவின் வீடு தேடிச் சென்று அங்கு அவரது மனைவியிடம் பேசியதாகக் கூறப்படுவதன் பின்னணியில் சஷி வீரவன்சவும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment