சீன ஆதிக்கத்தை நிறுவவே JO ஆர்ப்பாட்டம்: ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 September 2018

சீன ஆதிக்கத்தை நிறுவவே JO ஆர்ப்பாட்டம்: ரஞ்சன்ரணில் - மைத்ரி அரசு சீன ஆதிக்கத்துக்கு இடம்கொடுக்காது விட்டதன் விளைவே கூட்டு எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்கள் என தெரிவிக்கிறார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.

தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு இதுவரை தாம் கூடும் இடம் எது என்று கூட அறிவிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் அவர்களே விற்பனை செய்த முக்கிய இடங்கள் சூழ்ந்த காலி முகத்திடலுக்கு வந்தால் பொதுச் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்ட லட்சணத்தைக் காண முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


சீன ஆதிக்கத்தினை நிறுவ முனையும் கூட்டு எதிர்க்கட்சியினர் நீதித்துறை அச்சுறுத்தவே பாரிய ஆதரவாளர் கூட்டத்தை கொழும்புக்கு அழைத்து வர முயற்சிப்பதாகவும் எனினும், விரைவில் நீதி கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment