ஸ்ரீலங்கனுக்கு இனி முந்திரி கூட்டுத்தாபனத்திடமிருந்து 'சப்ளை'! - sonakar.com

Post Top Ad

Friday, 28 September 2018

ஸ்ரீலங்கனுக்கு இனி முந்திரி கூட்டுத்தாபனத்திடமிருந்து 'சப்ளை'!


ஸ்ரீலங்கன் விமான சேவையில் வழங்கப்படும் முந்திரியை நாய்க்கும் கொடுக்க முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன் வைத்த கடுமையான விமர்சனத்தையடுத்து முந்திரி கொள்வனவை இடம் மாற்றிய ஸ்ரீலங்கன் அடுத்த மாதத்திலிருந்து இலங்கை முந்திரிக் கூட்டுத்தாபனத்திடமிருந்தே தமக்குத் தேவையான முந்திரியைப் பெற்றுக்கொள்ளவுள்ளது.2016ம் ஆண்டு வரை கூட்டுத்தாபனத்திடமே பெற்று வந்த போதிலும் பின்னர் டுபாய் நிறுவனம் ஒன்றிடம் குறைந்த விலையில் ஸ்ரீலங்கன் கொள்வனவு செய்ததாகவும் மீண்டும் அடுத்த மாதம் முதல் தமது நிறுவனமே வழங்கலை மேற்கொள்ளவுள்ளதாகவும் இலங்கை முந்திரி கூட்டுத்தாபன தலைவர் தமசிறி பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படும் ஸ்ரீலங்கனின் சேவைத் தரம் குறைந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக முறையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment