அரசியலமைப்பு கவுன்சில்: சம்பிக்கவுக்கு பதிலாக மஹிந்த சமரசிங்க - sonakar.com

Post Top Ad

Friday, 14 September 2018

அரசியலமைப்பு கவுன்சில்: சம்பிக்கவுக்கு பதிலாக மஹிந்த சமரசிங்க


அரசியலமைப்பு கவுன்சிலில் ஜனாதிபதியின் பிரதிநியாக இருந்த சம்பிக்க ரணவக்கவின் பதவிக்காலம் நிறைவுற்றுள்ள நிலையில் அதற்குப் பதிலாக மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


பிரதமர், சபாநாயகர், சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட்டோர் அடங்கிய குறித்த குழுவில் இதுவரை காலம் ஜனாதிபதியின் பிரதிநிதியாக சம்பிக்க இடம்பிடித்து வந்திருந்த நிலையில் தற்போது ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கமைய மாற்றீடாக மஹிந்த சமரசிங்க நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூட்டாட்சி அரசு தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment