மஸ்ஜித் முகாமைத்துவ வழிகாட்டி நூல் வெளியீடு - sonakar.com

Post Top Ad

Friday, 28 September 2018

மஸ்ஜித் முகாமைத்துவ வழிகாட்டி நூல் வெளியீடுமீட்ஸ் நிறுவனம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து மஸ்ஜித் முகாமைத்துவ வழிகாட்டி மற்றும் மஸ்ஜித் மைய சமூக மேம்பாடு ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டுள்ளது.

மீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சலீம் றிபாய் மௌலானா தலைமையில் கொழும்பு 10இல் உள்ள தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (26) இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமும் கௌரவ அதிதியாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி உள்ளிட்டவர்களுடன்  திணைக்கள அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள். மஸ்ஜிதுகளின் நிருவாகிகள், உலமாக்கள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அஷ்-ஷெய்க் அக்ரம் நூராமிதின் கிராஅத்துடனும் அமைப்பின் தலைவர் சலீம் றிபாய் மௌலாவின் வரவேற்புரையுடனும் ஆரம்பமான நிகழ்வில் விளக்கவுரையை அமைப்பின் ஆலோசகரும் ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்-ஷெய்க் அஹார் முஹம்மத் நிகழ்த்தினார், நூற்களின் அறிமுகத்தினை சிஹான் சறூக் வழங்கினார். விஷேட உரையை அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி வழங்கினார், பிரதம அதிதியின் உரையைத் தொடர்ந்து நன்றி உரையை அஷ்-ஷெய்க் எம்.எஸ்.அப்துல் முஜீப் (கபூரி) வழங்கினார்.

இதன்போது நூலின் முதற்பிரதிகளை அஷ்-ஷெய்க் அஹார் முஹம்மத் அமைச்சர் ஹலீமுக்கும், மீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சலீம் றிபாய் மௌலானா  அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்திக்கும், அஷ்-ஷெய்க் அக்ரம் நூராமித் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக்கிக்கும், அஷ்-ஷெய்க் எம்.எஸ்.அப்துல் முஜீப் ஜாமியா நளீமியாவின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் சுக்ரிக்கும், சட்டத்தரணி முனீர் அமைச்சர் பௌசிக்கும் உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்தனர். 

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment