மஹிந்தவின் பிரதமர் கனவு கலைந்து விட்டது: அகில - sonakar.com

Post Top Ad

Thursday, 6 September 2018

மஹிந்தவின் பிரதமர் கனவு கலைந்து விட்டது: அகில


கொழும்புக்குத் தமது ஆதரவாளர்களை அழைத்து வந்து அரசைக் கவிழ்க்கும் வரை தங்கியிருக்கப் போவதாக தெரிவித்த மஹிந்த ராஜபக்சவின் கனவு கலைந்து விட்டதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் அகில விராஜ் காரிய வசம்.


அவர் அழைத்து வந்த ஆதரவாளர்கள் பெரும்பாலும் மது பானக் கடைகளிலேயே குவிந்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியினர் கிண்டலடித்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களும் உலவி வருகிறது.

இந்நிலையியே, தன் பிரதமர் கனவை மஹிந்த தானாகவே முயற்சி செய்து கலைத்துக் கொண்டுள்ளதாக அகில விராஜ் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment