மைத்ரியின் பலவீனம்: 2020ல் மஹிந்த ஆட்சி: பிரித்தானிய ஆய்வு நிறுவனம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 15 September 2018

மைத்ரியின் பலவீனம்: 2020ல் மஹிந்த ஆட்சி: பிரித்தானிய ஆய்வு நிறுவனம்!


இலங்கை அரசியலில் 2020ல் மாற்றம் ஏற்படும் என எதிர்வு கூறியுள்ள பிரித்தானிய ஆய்வு நிறுவனமான EIU (Economist Intelligence Unit) , மைத்ரிபால சிறிசேன பலவீனமாக உள்ளதாகவும் அவரது ஆதரவுக்களம் குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.ஸ்ரீலசுக அதிருப்தியாளர்கள் மஹிந்தவின் பக்கமே சாய்வார்கள் எனவும் அவர்களை வென்றெடுக்கும் நிலையில் 2020ல் மஹிந்த ஆட்சி அமைவதைத் தடுக்க முடியாது போகும் எனவும் குறித்த நிறுவனம் தமது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மஹிந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அவருக்கு மிக நெருக்கமான உறவினரோ சகாவோ அவர் சார்பில் போட்டியிட்டு வெல்லப் போவதாகவும் குறித்த அமைப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment