மைத்ரி கொலை முயற்சி: நாமல் குமாரவிடம் 10 மணி நேர விசாரணை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 September 2018

மைத்ரி கொலை முயற்சி: நாமல் குமாரவிடம் 10 மணி நேர விசாரணை!


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக டி.ஐ.ஜி நாலக டி சில்வா மீது குற்றம் சுமத்தியிருந்த ஊழல் விரோத படையின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் நேற்றைய தினம் 10 மணி நேர விசாரணை நடாத்தியுள்ளனர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர்.மைத்ரி - கோத்தா இணைவதைத் தடுக்க பாதாள உலகத்தினரைப் பயன்படுத்தியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாலக தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாலக டிசில்வா தற்போது தகவல் தொழிநுட்ப பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment