உணர்ச்சிவசப்பட்டு 'இனத் துவேசத்துடன்' பேசி விட்டேன்: ராஜகருணா! (video) - sonakar.com

Post Top Ad

Sunday, 5 August 2018

உணர்ச்சிவசப்பட்டு 'இனத் துவேசத்துடன்' பேசி விட்டேன்: ராஜகருணா! (video)


முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை இன விரோத கருத்துக்களால் வசைபாடி வயதான நபரிடம் சண்டித்தனம் பேசிய தெரனியகல பிரதேச சபைத் தலைவர் லக்ஷ்மன் ராஜகருணா, அவ்வேளையில் தான் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு நடந்து கொண்டு விட்டதாகக் கூறி விளக்கமளித்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார்.குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் இவ்வாறு இனவிரோதத்துடன் நடந்து கொண்டது தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையிலேயே இரு முஸ்லிம் வர்த்தகர்களின் பிணக்கைத் தீர்த்து வைக்கவே தாம் அங்கு சென்றதாகவும் அதன் போது ஆவேசத்தில் அவ்வாறு நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment