அமெரிக்கா முதுகில் குத்துகிறது: அர்துகான்! - sonakar.com

Post Top Ad

Sunday 12 August 2018

அமெரிக்கா முதுகில் குத்துகிறது: அர்துகான்!


தளத்தில் நின்று துருக்கியோடு போட்டி போடுவதைத் தவிர்த்து நாணய பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்து, பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் மலினமான செயலில் அமெரிக்கா இறங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் துருக்கி அதிபர் அர்துகான்.


ரஷ்யாவுடனான உறவை வளர்த்துக் கொண்டுள்ள துருக்கி ரஷ்யாவின் நவீன ஏவுகணைத் தடுப்பு இயந்திரமான எஸ்-400 ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு ஆர்வம் வெளியிட்டிருந்த நிலையில் அடுத்தடுத்த பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது.

துருக்கியில் தீவிரவாத செயற்பாடுகளின் பின்னணியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பாதிரியாரை விடுவிக்கக் கோரியிருந்த ட்ரம்ப் நிர்வாகம், துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினிய  தயாரிப்புகளுக்கு மேலதிக வரியை விதித்து பொருளாதார அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. எனினும் தமது நாட்டின் மீது பொருளாதார யுத்தத்தை ஆரம்பித்து அமெரிக்கா முதுகில் குத்தியுள்ளதாக அர்துகான் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment