'நா நா' பேச்சை நிறுத்து; மேடையில் அசிங்கப்பட்ட முஸ்லிம் MP! (video) - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 July 2018

'நா நா' பேச்சை நிறுத்து; மேடையில் அசிங்கப்பட்ட முஸ்லிம் MP! (video)கெகிராவ விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம உரையாற்றிக் கொண்டிருக்கையில் மேடையில் 'பேசிக்கொண்டிருந்த' நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரகுமானை நோக்கி 'நா நா பேச்சை நிறுத்திக் கொள்' என காமினி ஜயவிக்ரம  தெரிவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அநுராதபுர மாவட்டத்தில் விகாரைகளுக்கு அரசிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக இசாக் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திம கமகே பதிலளித்திருந்தார்.

எனினும், தொடர்ந்தும் மேடையில் அமர்ந்திருந்த இருவரும் இது குறித்து பிரத்யேகமாக பேசிக்கொண்டிருக்க, அவ்வேளையில் உரையாற்றிக் கொண்டிருந்த காமினி ஜயவிக்ரம நாநா பேச்சை நிறுத்து என உரத்துக் கூறியிருந்ததோடு ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளும்படி அறிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment