அலோசியசின் சிறைக்கூடத்திலிருந்து கைத்தொலைபேசி மீட்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 5 July 2018

அலோசியசின் சிறைக்கூடத்திலிருந்து கைத்தொலைபேசி மீட்பு!


அர்ஜுன் அலோசியஸ் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கூடத்துக்குள் கைத்தொலைபேசி உபயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு ஐந்து சிம் கார்டுகள் மற்றும் மூன்று கைத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கைத்தொலைபேசிகளுள் ஒன்று அலோசியசின் மெத்தைக்கு அடியில் இருந்ததாக இன்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தின் பின்னணியில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அவரது நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பாலிசேன ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment