கோறளைப்பற்று: முதியோர்களுக்கான மருத்துவ முகாம் - sonakar.com

Post Top Ad

Monday, 16 July 2018

கோறளைப்பற்று: முதியோர்களுக்கான மருத்துவ முகாம்கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதியோர்களுக்கான மருத்துவ முகம் ஒன்று 16.07.2018 திங்கள் கிழமை இன்று   கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணிக்கு கோ.பற்று மத்தி பிரதேச செயலாளர் முஸ்ஸம்மில்  தலைமையில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தக பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.றிக்காஸ் அவர்களினால் முதியோர்கள் எதிர் கொள்ளும் சவால்களும் அவற்றை கையால்வதற்கான வழி முறைகளும் எனும் தலைப்பிலான  விசேட  உரை ஒன்று நிகழ்த்தப்பட்டது. 


அத்தோடு இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதியோர்களுக்கான இலவச இரத்த அழுத்த பரிசோதனையும், ஆலோசனைகளும் இடம் பெற்றது இந்நிகழ்வில் பிரதேச செயலக முதியோர்களுக்கு பொறுப்பான அதிகாரிகளும், நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்தோடு இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதியோர்களுக்கான போசாக்கு உணவுகளும் ஏற்பாட்டு குழுவினரால் வழங்கப்பட்டது.

-எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

No comments:

Post a Comment