கட்டார்: ஸ்டாஃபோர்ட் ஶ்ரீலங்கா பாடசாலை தலைவர் நீக்கம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 July 2018

கட்டார்: ஸ்டாஃபோர்ட் ஶ்ரீலங்கா பாடசாலை தலைவர் நீக்கம்


பாடசாலை நிதிகளை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கட்டாரில் இயங்கி வரும் ஸ்டாஃபோர்ட் ஶ்ரீலங்கா பாடசாலையின் தலைவரான சினெஷெர் சில்வெஸ்டர் பொன்சேகா பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் கட்டாருக்கான இலங்கைத் தூதர் ASP லியனகே.இதன் பின்னணியில் டான் ரோஷன் சஞ்சய்யா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல் துமாமா பகுதியில் புதிய பள்ளி கட்டடம் 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு இன்னும் மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

தற்பொழுது, ஸ்டாஃபோர்ட் ஶ்ரீலங்கா பாடசாலையில் 1,400 மாணவ மாணவிகள் உள்ளனர். புதிய வளாகத்தை ஆரம்பித்ததன் பின்  2,400 மாணவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் இலங்கை தூதுவர் ASP லியனகே தெரிவித்துள்ளார்.

-முஸாதிக் முஜீப்

No comments:

Post a Comment