விஜயகலாவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்! - sonakar.com

Post Top Ad

Monday, 9 July 2018

விஜயகலாவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்!வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி எனவும் தனது அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர் மற்றும்  இவருக்கு எம்.பி  பதவி எதற்கு? என்ற வாசகங்களை உள்ளடக்கி முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ் நகரில்  பரவலாக  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.   இன்று (9) காலை குறித்த சுவரொட்டிகள் யாழ் நகரப்பகுதிகள் எங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதுடன்  இந்த சுவரொட்டியை வெளியிட்டவர்கள் நாளைய தலைமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா  மகேஸ்வரனை தமிழ்த்தலைவி என குறிப்பிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர்   சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளன.அந்த சுவரொட்டியில்   என்றும் நாம் உங்களுடன்  தமிழ் பேசும் மக்கள் என  பெயரிடப்பட்டு சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment