பாதுக்க: விகாராதிபதியை வாளுடன் சென்று மிரட்டிய நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 8 July 2018

பாதுக்க: விகாராதிபதியை வாளுடன் சென்று மிரட்டிய நபர் கைது!


பொசன் போயா விசேட வழிபாடு நடாத்தப்படும் நிலையில் பாதுக்க, மொரகஹதன்ன விகாரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஒலிபரப்பினால் அதிருப்தியுற்ற பிரதேச இளைஞர் ஒருவர் கையில் வாளுடன் சென்று விகாராதிபதியை மிரட்டிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.


பொலிசாரின் அனுமதியுடனேயே ஒலிபரப்பு இடம்பெறுவதனால் பொலிசில் சென்று முறையிடும்படி விகாராதிபதி பதில் கூறியதாகவும் எனினும் குறித்த இளைஞர் விகாராதிபதியை தாக்கப் போவதாக மிரட்டிய நிலையில் பொலிசார் தலையிட்டு குறித்த நபரைக் கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பௌத்த விகாரைகளில் காலையில் ஒலிபரப்பப்படும் 'பன' இடையூறாக இருப்பதாக பல இடங்களில் சர்ச்சைகள் இடம்பெற்று வருவதுடன் வழக்குகளும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment