ரணில் அர்ஜுன் மகேந்திரனையும் அழைத்து வரட்டும்: ரோஹித - sonakar.com

Post Top Ad

Sunday, 8 July 2018

ரணில் அர்ஜுன் மகேந்திரனையும் அழைத்து வரட்டும்: ரோஹித


சிங்கப்பூர் விஜயம் செய்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க வரும் போது அர்ஜுன் மகேந்திரனையும் அழைத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார் ரோஹித அபேகுணவர்தன.மிக் விமானக் கொள்வனவு மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதர் உதயங்க வீரதுங்க மஹிந்தவின் அழைப்பின் பேரில் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்றுள்ள ரணில் தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வர வேண்டும் என ரோஹித்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment