ஞானசாரவுக்கு பிணை வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்! - sonakar.com

Post Top Ad

Friday, 22 June 2018

ஞானசாரவுக்கு பிணை வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்!


சிறைச்சாலை வைத்தியசாலையில் இருக்கும் ஞானசாரவை பிணையில் விடுவிக்காவிட்டால் இன்று முதல் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக தெரிவிக்கின்றனர் மாகல்கந்த சுகந்த குழுவினர்.



இன்றைய தினம் ஞானசாரவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் நீதிமன்றம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றை அவமதித்து உட்புகுந்த ஞானசார, சாட்சியாக இருந்த சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய குற்றச்சாட்டிலேயே ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையுடன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment