ம.கிழக்கு செல்லும் பணிப்பெண்களுக்கு கருத்தடை ஊசி; விசாரணைக்கு உத்தரவு! - sonakar.com

Post Top Ad

Saturday, 19 May 2018

ம.கிழக்கு செல்லும் பணிப்பெண்களுக்கு கருத்தடை ஊசி; விசாரணைக்கு உத்தரவு!


மத்திய கிழக்குக்குப் பணிப்பெண்களாக செல்வோருக்கு கருத்தடை ஊசி ஏற்றப்படுவதாக வெளியான தகவல் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ.


இவ்வாறு ஏதும் நடைபெறுகிறதா என்பது குறித்து தமக்குத் தெரியவில்லையெனவும் வதந்தியாயினும் கூட அது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு செல்லும் பணிப்பெண்களுக்கு Depo-Provera ஊசி ஏற்றப்படுவதாக வெளியான தகவலையடுத்தே ஹரின் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment