கூடவே இருந்த 'மகா' திருடன்: சந்திரிக்கா விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 6 May 2018

கூடவே இருந்த 'மகா' திருடன்: சந்திரிக்கா விளக்கம்!


நாட்டின் மிகப்பெரிய திருடன் தனது ஆட்சிக்காலத்தில் தனதருகே இருந்திருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.#சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் அவரது செயலாளராகக் கடமையாற்றி ஜனாதிபதி செயலகத்துக்குள் தனது அதிகாரத்தை வளர்த்துக் கொண்ட ஐ.கே. மகநாம, கைதின் பின் இடைநிறுத்தப்படும் வரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் செயலக பிரதான அதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையிலேயே இந்திய வர்த்தகர் ஒருவரிடம் 56 கோடி ரூபா லஞ்சப் பேரம் நடாத்தி, அதனை 20 கோடி ரூபா வரை குறைத்து, 2 கோடி ரூபா முற்பணமாக பெற்றுக்கொள்ள முனைந்த வேளையில் கடந்த புதன் கிழமை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment