சஜித் பிரேமதாசவுக்கு இறுதி வாய்ப்பு: திஸ்ஸ! - sonakar.com

Post Top Ad

Monday, 28 May 2018

சஜித் பிரேமதாசவுக்கு இறுதி வாய்ப்பு: திஸ்ஸ!


இந்தத் தடவையும் தவற விட்டர் சஜித் பிரேமதாசவுக்கு மீண்டும் ஒரு தடவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க.

சஜித்திடம் தலைமைப்பதவி செல்வதை விரும்பாதவர்கள் கட்சிக்குள் இருக்கிறார்கள் எனவும் முறையான திட்டமிடல் மூலம் சஜித் அதனை செய்யத் தவறினால் இனியும் அவருக்கு அவ்வாய்ப்பு கிடைக்கப் போவதில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு அநீதியிழைக்காது சஜித் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் திஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

சஜித் - ரணில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் திஸ்ஸ பெரும் பங்காற்றியிருந்த அதேவேளை, திடீரென மஹிந்த அணிக்குத் தாவி கட்சியிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment