ரணில் மைத்ரி தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும்: அநுர - sonakar.com

Post Top Ad

Friday, 25 May 2018

ரணில் மைத்ரி தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும்: அநுர


நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்கக் கோரும் 20ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள நிலையில் ரணில் - மைத்ரி இது தொடர்பிலான தமது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


இதற்கான வாக்குறிதியோடே 2015 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேன, நாடாளுமன்றம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கான மாற்றீடை உருவாக்கினால் தாம் தயார் என அண்மையில் லண்டனில் வைத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இதற்கான மசோதா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment