தினக்குரலின் இனவாதமும் சிறுபிள்ளைத்தனமான விளக்கமும் - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 May 2018

தினக்குரலின் இனவாதமும் சிறுபிள்ளைத்தனமான விளக்கமும்


கடந்த 28ம் திகதி கிழக்கு தமிழர்களுக்கு எதிராக தலை தூக்கும் முஸ்லிம் இனவாதம் என தலைப்பிட்டு சர்ச்சையை உருவாக்கிய தினக்குரல் இன்று அதற்கு சிறுபிள்ளைத்தனமான கவலை வெளியிட்டுள்ளது.

முறுகலில் ஈடுபட்ட தரப்பொன்றின் கருத்தொன்றையே தமது தலைப்புச் செய்தியாக பிரசுரித்திருந்ததாகவும் அது சமூக வலைத்தளத்தில் 'குறிப்பிட்ட' குழுவொன்றை நோக்கியதெனவும் தெரிவிக்கிறது. எனினும், 28ம் திகதி பதிப்பில் எழுதுனரின் பெயர் குறிப்பிடாத நிலையில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்ற அவ்வாக்கம் தினக்குரலின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது.


எனினும், தற்போது அக்கரைப்பற்று, காத்தான்குடி, கிண்ணியா உட்பட பல்வேறு இடங்களில் எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தினக்குரல் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இம்மறுப்பும் வெறும் சாக்கு போக்காகவே அமைந்துள்ளதுடன், ஊடக தர்மத்தைப் பேணி முறையான விளக்கமொன்று அளிக்கப்படாமை கவலையளிக்கிறது.

அன்றைய தினம் அதே ஆக்கம், யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் செய்தியாளர் ஒருவரினால் அனுப்பப் பட்ட போதிலும் பொறுப்புள்ள எந்த ஊடகமும் அதனைப் பிரசுரிக்காத நிலையிலேயே தினக்குரல் அதனை முன் பக்க தலைப்புச் செய்தியாக பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-Azeem M.

No comments:

Post a Comment