சட்டமா அதிபருக்கு கட்டாய லீவு; தொடரும் மஹதிரின் அதிரடி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 15 May 2018

சட்டமா அதிபருக்கு கட்டாய லீவு; தொடரும் மஹதிரின் அதிரடி!


ஊழல், மோசடியினால் நம்பிக்கையிழந்து போயிருந்த மக்களுக்கு அதிலிருந்து விடிவைப் பெற்றுத்தரும் வாக்குறுதியளித்து தனது 92வது வயதில் மீண்டும் மலேசிய பிரதமரான மஹதிர் முஹம்மத், பதவியேற்றதும் கையுமாக தனது அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறார்.


இதன் பின்னணியில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்த சட்டமா அதிபர் முஹமத் அபன்டி அலி, நேற்றைய தினம் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அரசின் ஊழல்களைக் கண்டுபிடித்து தண்டிக்கப் போவதாக ஆட்சிபீடமேறிய ரணில் - மைத்ரி கூட்டரசு முன்னராக அதற்குத் தடையாக இருப்பதாகக் கூறி நீதியமைச்சரை அப்பதவியிலிருந்து நீக்கி மீண்டும் அதே நபருக்கு உயர் கல்வி அமைச்சுப் பொறுப்பை வழங்கியுள்ளமையும் தொடர்ந்தும் வாய்மூலமான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment