கடத்தப்பட்ட ஊடகவியலாளரை காப்பாற்றினேன்: கரு - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 May 2018

கடத்தப்பட்ட ஊடகவியலாளரை காப்பாற்றினேன்: கரு


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் தனது தலையீட்டினாலேயே குறித்த நபரின் உயிர் தப்பியது என அவர் விளக்கமளித்துள்ளார்.மஹிந்த அரசில் இடம்பெற்ற மேலும் ஓரு ஆட்கடத்தல் விவகாரமான குறித்த விடயத்தின் பின்னணியில் இராணுவ உயரதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே அக்கால கட்டத்தில் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சராகப் பதவி வகித்த கரு ஜயசூரியவிடம் வாக்குமூலம் கோரப்பட்டுள்ளமையும் கடத்தலை உடனடியாக தானே மஹிந்தவுக்கு அறிவித்ததாக கரு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment