ஐ.தே.கட்சிக்குள் மீண்டும் 'சஜித்' சர்ச்சை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 May 2018

ஐ.தே.கட்சிக்குள் மீண்டும் 'சஜித்' சர்ச்சை!


ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாற்றீடாக நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் சஜித் பிரேமதாசவை அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இந்நிலையில், புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சிதைக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில் சஜித் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் ரவி கருணாநாயக்க.

சஜித் - ரணில் அணியென இரண்டாகப் பிரிந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி 2015 பொதுத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றியது. அண்மைய கட்சி மறுசீரமைப்பின் போது சஜித் பிரேமதாசவின் பதவியில் மாற்றம் செய்யப்பட்டிருக்காத நிலையில் தலைமைத்துவம் தொடர்பில் தாமும் திருப்தியுடன் இருப்பதாக சஜித் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கட்சிக்குள் ரணிலுக்கு எதிராக எழுந்துள்ள சூழ்நிலையின் பின்னணியில் சஜித் அலையும் எதிர்ப்பலையும் உருவாகி வருவதாக ஐ.தே.க பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment