'கொழும்பு' மாலை தீவினரின் இரண்டாம் தாயகம்: நஷீட்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 May 2018

'கொழும்பு' மாலை தீவினரின் இரண்டாம் தாயகம்: நஷீட்!


மாலை தீவின் தலை நகர் மாலேக்கு அடுத்தபடியாக கொழும்பிலேயே மாலைதீவினர் அதிகமாக வாழ்வதாக தெரிவித்துள்ளார் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான முகமத் நஷீட்.


மாலைதீவில் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய நஷீட் ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார். எனினும், அடிக்கடி கொழும்பு வரும் அவர் அண்மையில் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவை நேரில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதன் போதே நஷீட் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் மாலைதீவின் போதைப் பொருள் மற்றும் பாதாள உலக கோஷ்டிகளும் கொழும்பு, நீர்கொழும்பு பகுதிகளில் பரவலாக வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மாலைதீவில் இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கட்சிப் பணிகளை கொழும்பிலிருந்தே நஷீட் மேற்பார்வை செய்து வருவதோடு அவருக்கு இங்கு அமைச்சு மட்ட பாதுகாப்பும் வழங்கப்படுவதாக அறியமுடிகிறது.

No comments:

Post a Comment