ஈரானிடம் இரகசிய அணு ஆயுத திட்டம்: இஸ்ரேல் - sonakar.com

Post Top Ad

Monday, 30 April 2018

ஈரானிடம் இரகசிய அணு ஆயுத திட்டம்: இஸ்ரேல்


மத்திய கிழக்கு அரபு நாடுகளைத் துண்டாடும் அமெரிக்க முயற்சி வெற்றியளித்துள்ள நிலையில் ஈரானிடம் இரகசிய அணு ஆயுதத் திட்டம் இருப்பதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக தெரிவிக்கிறார் பென்ஜமின் நெதன்யாஹு.ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் ரத்துச் செய்ய முயல்கின்ற நிலையில் நெதன்யாஹு இவ்வாறு புதிய தகவல் வெளியிட்டுள்ள அதேவேளை பிரான்ஸ் இது தெடர்பில் தீவிரமாகக் கலந்துரையாடி வருகிறது.

முன்னதாக ட்ரம்பின் முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இதன் பின்னணியில் ஈரானுக்கு எதிராக உலகம் அணி திரள வேண்டும் என தற்போது சவுதி சென்றுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்சூழ்நிலையில், ஈரானின் இரகசிய அணு ஆயுத திட்டம் தொடர்பில் தம்மிடம் ஆதாரமிருப்பதாகவும் அமெரிக்கா குறித்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் இஸ்ரேல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment