5.7 மில்லியனில் கழிப்பறையில்லை 'வேறு' திட்டம்: ரோசி! - sonakar.com

Post Top Ad

Friday, 18 May 2018

5.7 மில்லியனில் கழிப்பறையில்லை 'வேறு' திட்டம்: ரோசி!


கொழும்பு மேயர் இல்லத்தின் கழிப்பறைகளை புனர்நிர்மாணம் செய்ய 5.7 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநகர சபையின் ஜே.வி.பி உறுப்பினர் கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து குறித்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.இந்நிலையில், தாம் அவ்வாறு செய்யப் போவதில்லையெனவும் மாறாக தொல்பொருட் திணைக்களத்தின் உதவியுடன் மேயர் இல்லத்தை 5.2 மில்லியன் ரூபாவில் முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப் போவதாகவும் ரோசி விளக்கமளித்துள்ளார்.

குறித்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பாரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் ரோசி இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment