கொழும்பு மேயர் இல்ல கழிவறைகளை புதுப்பிக்க 57 லட்சம்: JVP கேள்வி! - sonakar.com

Post Top Ad

Thursday, 17 May 2018

கொழும்பு மேயர் இல்ல கழிவறைகளை புதுப்பிக்க 57 லட்சம்: JVP கேள்வி!


கொழும்பு மேயர் ரோசியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கழிவறைகளைப் புதுப்பிக்க 5.7 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சபையில் கேள்வியெழுப்பியுள்ளது ஜே.வி.பி.நேற்றைய தினம் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்ட போது, மேயர் இல்லத்தின் கழிவறைகள் உபயோகிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் ரோசி பதிலளித்துள்ளார்.

இதேவேளை நகரில் பொது கழிப்பிடங்கள் சுகாதாரமற்ற முறையிலும் முறையாகப் பராமரிக்கப்படாமலும் இருக்கும் நிலையில் ரோசி பொது மக்கள் பணத்தை வீணடிப்பதாக ஜே.வி.பி உறுப்பினர் சுமித் பசபெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment