இராணுவத்திடம் சரணடைந்த 29 சிறுவர்களைக் காணவில்லை: ITJ - sonakar.com

Post Top Ad

Thursday, 17 May 2018

இராணுவத்திடம் சரணடைந்த 29 சிறுவர்களைக் காணவில்லை: ITJஇறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த குழந்தைகளுள் ஆகக்குறைந்தது 29 பேர் காணாமல் போயிருப்பது உறுதியென தகவல் வெளியிட்டுள்ளது இது தொடர்பில் நீண்ட ஆய்வை மேற்கொண்ட தென்னாபிரிக்க மனித உரிமைகள் அமைப்பான  International Truth and Justice.

இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமைகள் மீதான ஆய்வுகளை மேற்கொண்டு வந்த குறித்த அமைப்பு இத் தகவலை வெளியிட்டுள்ளதுடன் நியாயம் கேட்டுப் போராடி வரும் குடும்ப உறுப்பினர்களுக்கு பதில் தரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.அத்துடன் பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்குட்பட்டவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment