அக்குறனை அஸ்ஹர் தேசிய பாடசாலை; 111 வருடங்கள்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 15 May 2018

அக்குறனை அஸ்ஹர் தேசிய பாடசாலை; 111 வருடங்கள்!


அக்குறனை மண் ஈன்றெடுத்த அழியாத செல்வமாம் அஸ்ஹர் தேசிய பாடசாலை. 1907 ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி அக்குறனை மண்ணில் உதித்தது.அன்று தொடக்கம் இன்று வரை பல நூறு வெற்றிகளையும் சந்தோசங்களையும் பகிர்ந்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் எதை மறந்தாலும் தம் தாயின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டி மகிழ்வதே நம் மாணவர் செல்வங்களின் சந்தோசமாகும்.

மே 17ஆம் திகதி நோன்பு விடுமுறை என்பதனால் மே 14ஆம் திகதி அன்று அஸ்ஹர் தாயின் பிறந்த நாளினை இனிதே கொண்டாடினர். க. பொ. தா உயர் தர 2019 தொகுதி மாணவரகளினால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 


அஸ்ஹரின் முதல்வர் Mr.A.L Anwer (B.Ed(Hon). SLPS 1) அவர்களின் தலைமையில் Chief Guest அஸ்ஹரின் பழைய மாணவரான Mr M.J.M Fouz ( Chemical Engineer BSc Specialized in Water Treatment Director Marketing uniken Lanka Ltd Colombo 10) அவர்களும் Guest of Honor Mrs Hidhaya Kabeer ( Former Teacher- k/ Azhar Central College) மற்றும் Special Guest Ash - Sheik . I . Hashim ( ADE- Tamil Unit - Zonal Education office Katugastota அவர்களாலும் மற்றும் ஆசிரிய ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்து சிறப்பித்தார்கள். 


இவ்வைபவத்தின் சிறப்பம்சமாக கேக்கினை பாடசாலை முதல்வர், கௌரவ அதிதி மற்றும் உயர்.தர மாணவ தலைவர் Asan Umar அவர்களினாலும் வெட்டப்பட்டது. மேலும் அதிபர் மற்றும் கௌரவ அதிதி அவர்களினாலும் உரை நிகழ்த்தப்பட்டதுடன் மாணவர்களுக்கும் வாழ்த்தும் தெரிவித்தனர். உயர்.தர மாணவர்களால்அதிபருக்கும் அதிதிகளுக்கும் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டன.அத்துடன் ஆசிரியர்களும் வாழ்த்துக்களை அம்மாணவர்களுக்கு தெரிவித்தனர்.

- A.W.F Sharmila (NDT Food technology, BA) 

No comments:

Post a Comment