சவுதி: WWE மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி! - sonakar.com

Post Top Ad

Friday, 13 April 2018

சவுதி: WWE மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி!


சவுதி அரேபியாவில் எதிர்வரும் 10 வருடங்களுக்கு WWE எனும் பெயரால் நடாத்தப்பட்டு வரும் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டு, பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களினால் அரங்கேற்றப்பட்டும் மல்யுத்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 27ம் திகதி குறித்த பொழுது போக்கு நாடக நிறுவனத்தின் பிரபல வீரர் அன்டர் டேக்கரும் பங்கேற்கவுள்ளதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

சினிமா திரையரங்குகள் உட்பட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் தற்போது சவுதி அரேபியாவில் தாராளமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றமையும் நிகழ்வுகள் இதற்கு முன்னரும் 2016 வரை அவ்வப்போது சிறிய அளவில் இடம்பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment